சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் விழா குழுவினர் (சிம்சன் குரூப்) கடந்து வந்த பாதை

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் விழா குழுவினர் - தொடக்கம் – திரு. சிதம்பரம் அய்யர்

தெய்வத்திரு நகர்G.சிதம்பர அய்யர் அவர்கள் “சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் அனைத்து மாநிலப் பூக்கைங்கர்யம்” என்ற பெயரில் சமயபுரத்தாள் உத்தரவுப்படி 1977ஆம் ஆண்டு முதல் சென்னையில் தொடங்கி, சிம்சன் கம்பெனி தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடுபத்தினரோடு அம்மன் அருள்பெற இப்பூக்கைங்கர்யம் தொடங்கினார்கள்..

அதற்கு முன் சுமார் 20 ஆண்டுகளாக சமயபுரத்திற்கு கிழக்கே 3மைல் தூரத்தில் உள்ள அவருடைய சொந்த கிராமமாகிய நகர் கிராமப் பூக்கைங்கர்யத்தில் பங்கு கொண்டிருந்தார். சமயபுரம் கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களியிருந்து பக்தர்கள் மேளதாளம், நாதஸ்வர கச்சேரி, கரகாட்டம், மற்றும் வாணவேடிக்கையுடன் நடை பயணமாக அம்மனுக்கு ரோஜா, மல்லிகை, சம்பங்கி, முல்லை,அரளி, சாமந்தி மரிக்கொழுந்து, தவனம், செந்தாழம் பூ, மனோரஞ்சிதம், தாமரை போன்ற பூக்கள் கூடை, கூடையாக சுமந்து ஊர்வலமாக வந்து இப்பூக்களை அம்மனுடைய பாதகமலத்தில் சமர்ப்பித்தார்கள்.

திரு நகர் G.சிதம்பர அய்யர், குடும்ப சூழ்நிலை காரணத்தினால் சென்னை மாநகருக்கு குடிபெயர்ந்தார், 1977ம் ஆண்டு முதல் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் அனைத்து மாநிலப்பூக்கைங்கரியம் என்று சமயபுரத்தாள் அருளாசியுடன் ஆரம்பித்து இன்றுவரை தொடர்ந்து மிகசிறப்பான முறையில் இப்பூச்சொரிதல் விழா  நடந்துவருகிறது. வரும் 12.03.2023 அன்று நடைபெறும் பூச்சொரிதல் 47ம் ஆண்டு பூச்சொரிதல் திருவிழாவாகும்.

திரு நகர் G.சிதம்பர அய்யர் தன் குடும்பத்தாரோடு, சென்னை, மயிலாப்பூரில் குடியமர்ந்து, அங்குள்ள பக்தர்களை திரட்டி மற்றும் அவரது திருக்குமாரர் நகர் C.சுப்ரமணியன் அவர்கள் சென்னையில் சிம்சன் நிறுவனத்தில் பணி அமர்ந்த காரணத்தினால் சிம்சன் நிறுவனத்தில் பணியாற்றி சிலருக்கு சமயபுரத்து அம்பாள் மகிமையை அவர்களுக்கு எடுத்துரைத்து அவர்கள் குடும்பத்தாரோடு அழைத்துவந்து சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதலில் கலந்துக்கொள்ள எல்லா ஏற்பாடுகள் மேற்கொண்டார்.

இவர்கள் மாசி மாதம் கடைசி ஞாயிறு காலை ஒரு தனியார் பேருந்தினை ஏற்பாடு செய்து, சென்னை பூ அங்காடியிலிருந்து ரோஜா, மல்லிகை, சம்பங்கி, முல்லை,அரளி, சாமந்தி மரிக்கொழுந்து, தவனம், செந்தாழம் பூ, மனோரஞ்சிதம், தாமரை போன்ற உதிரிபூக்கள் பெற்றுக்கொண்டு அண்ணா சாலை, சிந்தாதிரிபேட்டை அருகில் உள்ள சிம்சன் கம்பெனி விநாயகர் கோயிலில் பூஜை செய்த உடன் பக்தி பரவசத்துடன் சமயபுரம் நோக்கி பயணிப்பார்கள். சுமார் மாலை 3மணி, - 4மணிக்குள்ளாக, பேருந்து திருச்சி சமயபுரம் வந்தடையும்.

சென்னை – திருச்சி பிரதான சாலையில் இவர்கள் வருகைக்காக திரு நகர் G.சிதம்பர அய்யர் காத்திருப்பார். அவர் சென்னையிலிருந்து கொண்டுவந்த அனைத்து உதிரிப்பூக்களை பெற்றுக்கொண்டு, பேருந்தில் வந்த அனைவருக்கும் குடிநீர், சிற்றுண்டி மற்றும் காபி போன்றவை பரிமாறியபின், அவர்கள் திருச்சியில் உள்ள மற்ற கோயில் ஸ்வாமிகளை தரிசித்துவிட்டு சுமார் 9மணி – 10மணி அளவில் சமயபுரம் வளவனூர் ராஜமாணிக்கம் முத்துராஜா மூக்காயி அன்னதான சத்திரம் வந்து அங்கு நடைபெறும் அன்னதானத்தில் கலந்துக்கொண்டு பிறகு பூச்சொரிதல் ஊர்வலத்தில் பக்தி பரவசத்தோடு கலந்துகொள்வார்கள்.

 

நகர் கிராம மக்களும், திரு.G.சிதம்பர அய்யர் குடும்பத்தாரும், உற்றார், மற்றும் உறவினர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்து பூச்சொரிதலுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகள் பயபக்தியுடன் ஒரு குறைவின்றி ஏற்பாடுகள் செய்வார்கள். பூச்சொரிதலுக்கு முன்பு திரு G.சிதம்பர அய்யர் அவர்கள் பைரவ ஸ்வாமிக்கு முறைப்படி பூஜை, அர்ச்சனை செய்வார்.

அனுபவம் வாய்ந்த ஓவியரை கொண்டு 6அடி உயரத்திற்கு சமயபுரம் மாரியம்மன் படம் வரைந்து, அதன் பாதுகாப்பு கருத்தில்கொண்டு மர தச்சர் வைத்து அதற்கு ஏற்ப சட்டம் கோர்த்து வளவனூர் ராஜமாணிக்கம் முத்துராஜா - R.மூக்காயி அம்மாள் தம்பதியரின் அன்னதான சத்திரத்தில் பத்திரபடுத்தி வைக்கப்பட்ட படத்தினை  பெருவளை ஆற்றங்கரையில் கொண்டுவந்து, ஒரு மாட்டுவண்டியில் அம்மனுக்கு நன்கு அலங்கரித்து, மின்விளக்குகள் பொருத்தி உதிரி பூக்களை வண்டியில் நிரப்பி மற்றொரு வண்டியில் மேளதாளம், நாதஸ்வர கச்சேரியுடன் சென்னை பக்தர்கள், நகர் கிராமத்து பக்தர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் ஊர்வலமாக வந்து சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட உதிரிப் பூக்களை கூடைகளில் நிரப்பி, ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்கள் விடியற்காலை 3மணி அளவில் அம்மனை தரிசனம் செய்து பூக்களை அம்மனுடைய பாதகமலத்தில் பக்தியோடு சமர்ப்பிப்பார்கள். இவர்களுக்கு முன்பே சமர்ப்பித்த உதிரி பூக்களை, சிறுதுளி பிரசாதமாக பெற்றுக்கொண்டு சத்திரம் திரும்பி இளைப்பாறுவார்கள். மறுநாள் காலை பேருந்தில் வந்த அனைவரும் திட்டமிட்டபடி சுற்றுலா செல்வார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, குடி தண்ணீர் மற்றும் வாழை இலை, பூஜை பிரசாதம் தயார் செய்து கொடுத்து வழி அனுப்பிவைப்பார்..

அம்மனை தரிசித்த அனைவரின் வேண்டுதல்கள் நிறைவேறிய காரணத்தினால், அவர்கள் தொடர்ந்தது  சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் விழாவில் குடும்பத்தோடு பங்கேற்று ஒரு கூட்டுபிரார்த்தனையாக பிரிதிபளிக்கும், ஒரு சில வருடங்கள் இரண்டு பேருந்தில் வருகைபுரிந்தனர். அதனால் அவர்கள் பணிபுரிந்த நிர்வாகமும் சிறப்பான முறையில் அமைந்தது.

சமயபுரத்து அம்மனின் பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் ஒரு குறிப்பிட்ட நன்நாளில் திரு.G.சிதம்பர அய்யர் மற்றும் சிலர் சென்னையிலிருந்து சமயபுரம் வந்து அம்மனுக்கு மிக சிறந்த முறையில் அபிஷேகம் செய்துவைப்பார்கள். அன்றைய தினம் அன்னதானமும் செய்து வந்தார்.

திரு. சுப்ரமணியன் அய்யர் மற்றும் திருமதி.சரஸ்வதி சுப்ரமணியன்

திரு நகர் G.சிதம்பரஅய்யருக்கு பிறகு அவருடைய புதல்வர் திரு.Nசுப்ரமணியன் அய்யர் மற்றும் மருமகள் திருமதி.சரஸ்வதி சுப்ரமணியன் அவர்கள் 1996ஆம் ஆண்டு முதல் பொறுப்பேற்று தந்தை ஆரம்பித்த ஆன்மிக பணியை தொடர்ந்து இன்னும் சிரத்தையோடு நடத்தினார்கள்.

இவர்கள் இருவரும் பணியில் இருந்த காரணத்தினாலும், பணி விடுப்பு எடுக்க இயலாமையின் காரணத்தினாலும், வண்டி, மாடு, அலங்காரங்கள், கச்சேரி, ஊர்வலம், போன்றவை ஏற்பாடு செய்ய சிரமப்பட்டனர். ஆகையால் வளவனூர் ராஜமாணிக்கம் முத்துராஜா - R.மூக்காயி அம்மாள் தம்பதியரின் அன்னதான சத்திரத்தில் ஊர்வலமாகக்கொண்டுவரும் சமயபுரம் மாரியம்மன் படத்திற்கு மிக பெரிய அளவில் பூ அலங்காரங்கள் செய்து, உதிரி பூக்கூடைகள் முன் வைத்து, ஞாயிறு காலை சுமார் 10மணி அளவில் முறைப்படி பக்தியோடு பூஜைகள் செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து, கலந்துகொண்ட அனைவருக்கும் அடையாளத்திற்கு பேட்ஜ் அணிவிக்கப்பட்டு பிறகு அதற்கு ஏற்ப அனுமதி சீட்டு பெற்று பூக்கூடை எடுத்து, நாதஸ்வர மேளதாளத்தோடு, சத்திரத்திலிருந்து அம்மன் கோயில்வரை ஊர்வலமாக சென்று அம்மனுடைய திருப்பாதங்களில் பூக்களை சமர்ப்பணம் செய்தார்கள். இதில் வழக்கம்போல் நகர் கிராமத்து பக்தர்கள், உற்றார், உறவினர் இப்பூச்சொரிதலில் சிம்சன் குரூப்போடு கலந்து விழாவினை சிறப்பிப்பார்கள்.

ஊர்வலம் புறப்பட்ட உடன் அன்னதானம் நடைபெறும். அன்னதானம் என்ற பெயரில் கல்யாண விருந்துக்கு இணையாக வடை பாயசத்தோடு நடைபெறும். சமையல்காரர்கள் சென்னையிலிருந்து வேன் ஏற்பாடு செய்து சமையலுக்கு வேண்டிய பொருட்களோடு சனிக்கிழமை அன்று முன்னதாகவே வந்து இரவே வந்து தங்கும் பக்தர்களுக்கு ரவாஉப்புமா, தயிர் சாதம் போன்ற உணவு, மறுநாள் காலை பூஜைக்கு வேண்டிய நைவேத்தியம் தயார் செய்யவேண்டும் மற்றும் பூச்சொரிதல் விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் காலை சிற்றுண்டி மற்றும் காபி, அதன் பிறகு சுமார் 1500 பேருக்கு அன்னதானத்திற்கு வேண்டிய உணவு தயார் செய்ய வேண்டும். இதன் பிறகு பேருந்தில் வந்த அனைவருக்கும் மற்றும் இரயில் பயணம் செய்வோருக்கும் இரவுக்கு வேண்டிய உணவு, புளியோதரை, சப்பாத்தி போன்றவை தயார் செய்து தரவேண்டும். அதன் பிறகு அவர்கள் சென்னை திரும்பவேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு அவர்கள் வருவார்கள்.

வளவனூர் ராஜமாணிக்கம் முத்துராஜா - R.மூக்காயி அம்மாள் தம்பதியரின் அன்னதான சத்திர உரிமையாளர் திரு.மாரிமுத்து அவர்கள் இந்த சிம்சன் குரூப் அவர்கள்மேல் தனி சிறப்பு கவனிப்பு செலுத்துவர், அவரின் நேர்பார்வையில், சத்திரம் சுத்தபடுதுவது, சமையற்கூடம் தயார் செய்தல், பூஜைக்கு வேண்டிய ஏற்பாட்டினை செய்தல் போன்றவை நடக்கும். பூச்சொரிதல் விழாவில் தம்பதியராக கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பிப்பார்கள். விழா முடிந்தவுடன் சத்திரம் சுத்தபடுத்துதல் போன்றவை அவர் மேற்கொள்வார். நகரசபை அனுமதி, சுகாதாரத்துறை அனுமதி போன்றவற்றை முறையாக வைத்திருப்பார்கள்.

சிம்சன் குரூப் அவர்களின் பயண நிகழ்ச்சியில் பிரதானமாக அமைவது சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் விழா, பிறகு அதைதொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் ஆன்மிகம் சார்ந்த சுற்றுலா பயணமாக அமையும். சிம்சன் குரூபில் பணியாற்றிய திரு.ஆறுமுகம் அவர்கள் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வார்கள், சுமார் 55 பேர்களை சுமக்ககூடிய சொகுசு பெரிய பேருந்து, அதில் பயணிக்கும் அனைவரின் பெயர் பட்டியல், வயதிற்கு ஏற்ப இருக்கை, அவர்களுக்கு வேண்டிய வசதிகள், பூச்சொரிதல் விழா முடிந்தபிறகு காணவேண்டிய ஆன்மிகம் சார்ந்த சுற்றுலா பயணம் போன்ற பணியினை மேற்கொள்வார்.

ஒவ்வொரு வருடம் டிசம்பர் மாதம், 25ம் தேதியில் சென்னை நேப்பியர் பூங்காவில் பூச்சொரிதல் விழாவில் கலந்துகொள்ளும் நண்பர்களை அழைத்து ஒரு கலந்துரையாடல் நடக்கும். அதில் கடந்த வருடம் வரவு – செலவு கணக்கு சமர்பிக்கப்படும், சென்ற வருடம் நிகழ்ச்சிகள், பயணங்களின் நிறைவு மற்றும் தாழ்வுப்பற்றி விவாதிப்பார்கள். அடுத்து நடப்பு ஆண்டுக்கான செல்லவேண்டிய இடங்களைப்பற்றி முடிவு செய்யப்படும். 

அருள்மிகு.முருகன் அருள் பெற்ற பாம்பன் குமரகுருதாச ஸ்வாமி

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் விழாவில் கலந்துக்கொள்ளும் அனைவரும் கூடி ஒவ்வொரு வருடம் ஜனவரி மாதம், 26ம் தேதியில் குடியரசு தினத்தன்று காலை 8.00 மணிக்கு அருள்மிகு  பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச ஸ்வாமிகளின் ஜீவசமாதியின் வளாகத்தில் அமையப்பெற்ற அருள்மிகு முருகர் சன்னதியில் முருகருக்கு, பாம்பன்ஸ்வாமிகளுக்கும் வஸ்திரம்சாற்றி, அபிஷேகம், அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெறும். பூஜை நடந்தவுடன் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படும். அதன் பிறகு சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் விழாவினை பற்றியும், செல்லவேண்டிய ஆன்மிகம் சுற்றுலாப்பற்றியும் ஒரு கலந்துரையாடல் நடக்கும் அதில் அனைவரின் கருத்துக்கேற்ப ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அன்று முதல் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் பணி துவங்கும். சுமார் 11.30 மணிக்கு பாம்பன்ஸ்வாமிக்கு நைவேத்தியம் சமர்பித்து, ஸ்ரீமத் குமரகுருதாச ஸ்வாமிகள் அருளிய குமாரஸ்தவம் நாமாவளி பக்தியோடு உச்சரித்தப்பின், அன்னதானம் நடைபெறும். அன்று விடுமுறையாதலால் நிறைய பக்தர்கள் கலந்துக்கொள்வார்கள். சுமார் 400 மேற்பட்ட பக்தர்கள் அன்னதானத்தில் கலந்துக்கொண்டு சிறப்பிப்பார்கள். அன்றைய தினம் பௌர்ணமி நாள், அமாவாசை நாள் அல்லது கிருத்திகை நாட்களாக இருந்தால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் விழா 2011 ஆண்டுக்கு பிறகு திரு.N.C.சுப்ரமணியன் அய்யர் அவர்கள் உடல்நிலை காரணமாக அவரால் தொடர்ந்து பூச்சொரிதல் பணியை மேற்கொள்ள முடியவில்லை, அவருடைய துணைவியார் அவரை முழுநேர கவனிக்க வேண்டிய நிர்பந்தத்தினால் அவரும் இப்பணியை மேற்கொள்ள இயலவில்லை. இம்மாதிரியான சோதனைமிக்க சூழ்நிலையிலும் அவர் தகப்பனார் அம்மன் மீது கொண்ட பக்தியினால் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் விழாவினை சில சோதனைக்குப்பிறகும் கூட சிரமப்பட்டு தொடர்ந்து நடத்திவந்தார், ஆகையால் இப்பணி தொடர்ந்து நடக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள். பூச்சொரிதல் விழா குழுவில் முக்கிய செயலில் உள்ள உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து திரு.தக்ஷ்ணாமூர்த்தி, திரு.A.V.ஸ்ரீனிவாசன், திரு.ஜானகிராமன் மற்றும் திருமதி.ராஜேஸ்வரி அவர்களை அழைத்து நீங்கள் அனைவரும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் விழாவினை தொடர்ந்து சிறப்பான முறையில் நடைபெற பங்கு கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்கள். இவர்கள் அனைவரும் இது சமயபுரத்தாள் கட்டளையாக கருதி விழா பணியினை சிரம் தாழ்த்தி மேற்கொண்டார்கள்.

திருமதி.சரஸ்வதி சுப்ரமணியன் அவர்களுக்கு பிறகு

சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் பூச்சொரிதல் விழா 2012 ஆண்டு சமயபுரத்தாளிடம் ஈடுபாடுகொண்ட அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செயல்பட துவங்கினார்கள். திரு.N.C.சுப்ரமணியன் மற்றும் அவர் துணைவியார் திருமதி.சரஸ்வதி சுப்ரமணியன் அவர்கள் வழிகாட்டுதலின்படி, அவர்கள் நடத்தியதற்கு நிகராகவும், அவர்கள் எங்கள் மீது கொண்ட நம்பிக்கை வீண் போகக்கூடாது என்ற பொறுப்புணர்வோடு திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் பூச்சொரிதல் விழா நடத்தியதற்கு இணையாக, பூஜையில் பங்கேற்றிய அனைவரின் மனநிறைவோடு அவ்விழா நடைபெற்றது. திருமதி மற்றும் திரு. N.C.சுப்ரமணியன் அவர்களும் அவ்விழாவில் பங்கேற்று இவ்விழா தொடர்ந்து நடைபெறும் என்ற நம்பிக்கையை பெற்றனர்.

சமயபுரம் பூச்சொரிதல் விழா மற்றும் அம்மனின் பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் குறிப்பிட்ட நன்நாளில் அம்மனுக்கு மிக சிறந்த முறையில் அபிஷேகம் நடைபெறும், இதற்கான அனைத்து செலவுகள் நாம் பெறும் நன்கொடைகள் பெற்றுதான் நடைபெறவேண்டும்.

இக்காரணத்தை கருத்தில்கொண்டு, 2012ம்ஆண்டு அன்னதானத்திற்கு அனுபவம்மிக்க சமையல்காரரை திருச்சியில் ஏற்பாடு செய்தோம். சனிக்கிழமை இரவு, ஞாயிறு காலை மற்றும் அன்னதான சமையலுக்கு வேண்டிய மளிகை, காய்கறிகள், சாப்பாட்டு வாழை இலை போன்ற அனைத்தும் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது. உதிரி பூக்கள் சென்னையிலிருந்து வழக்கம்போல் ஏற்பாடுசெய்யப்பட்டது. திரு.ஆறுமுகம் அவர்கள் பேருந்து ஏற்பாடுசெய்வார்கள், அதே பேருந்தில் உதிரி பூக்கள் கோயம்பேடு பூ அங்காடிலிருந்து பத்திரமாக கொண்டுவரும் பொறுப்பு திருமதி கமலாசெல்வம், மற்றும் திரு.நரசிம்மன் அவர்களது என்று திட்டமிட்டு செயல்பட்டோம். சத்திரம் உரிமையாளர் எங்களுக்கு ஒத்துழைபு நல்கியதால், அந்த பூச்சொரிதல் மற்றும் அன்னதானம் மிகசிறப்பாக நடைதேறியது, பூச்சொரிதல் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இவ்விழா தொடர்ந்து நடைபெறும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. பூச்சொரிதல் விழா முடிந்தப்பிறகு அனைவரும் திட்டமிட்டபடி ஆன்மிகம் சார்ந்த சுற்றுலா பயணம் மிக உற்சாகத்தோடு மேற்கொண்டோம்.

2016, 2017 ஆண்டு இந்து அறநிலைத்துறை இணை ஆணையர், சமயபுரம் மாரியம்மன் கோயில் அவர்களின் அனுமதிபெற்று பூச்சொரிதலில் கலந்துக்கொண்ட அனைவரும் எந்தவித சிரமமின்றி தனி வரிசையில் அம்மனுக்கு பூ சமர்ப்பணம் நடைந்தேறியது. வருடம் 2018ல் இருந்த இணை ஆணையர்  நமது விண்ணப்பத்தில் கையெழுத்துயிட்டார் ஆனால் கோயில் முழு பாதுகாப்பு காவல்துறைக்கு ஒப்படைக்கபட்டதால் நம் குழுவிற்கு தனி அனுமதி இல்லை என கூறப்பட்டது, அதனால் அனைவரும் பொதுவரிசையில் சென்று பூ சமர்ப்பணம் செய்து அம்மன் தரிசனம் பெற்றனர்.

2016ம் ஆண்டு முதல் வளவனூர் ராஜமாணிக்கம் முத்துராஜா - R.மூக்காயி அம்மாள் தம்பதியரின் அன்னதான சத்திர உரிமையாளர் திரு.மாரிமுத்து அவர்கள் எங்கள் சிரமத்தை கவனித்த காரணத்தினால்

அவர் சமையல் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அவர் தைப்பூச திருவிழாவிற்கு உற்சவஅம்மன் நம்முடைய சத்திரத்திற்கு பரம்பரையாக அழைத்துவந்து சிறப்பான முறையில் நடைபெற கோயில் குருக்களைகொண்டு அபிஷேகம் செய்து, விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு, மற்றும் இரவு உணவு வழங்குவார். இதைபோன்றே சித்திரைத் தேர் திருவிழாவிற்கும் பரம்பரையாக அன்று சத்திரத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். இதுபோன்று அவருக்கு பழுத்த அனுபவம் உள்ளதால், அவர் எங்களுக்கு உதவ முன்வந்தார்

சனிக்கிழமை இரவு பரிமாற வேண்டிய உணவு, ஞாயிறு காலை உணவு, அன்னதானம், அன்று இரவு பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் வேண்டிய உணவு பட்டியலை பெற்றுக்கொண்டு மளிகை, காய்கறிகள், சாப்பாட்டு வாழை இலை, குடிதண்ணீர், பால், தயிர், எரிபொருள் போன்ற அனைத்தும் வாங்க அவரே நேராக சென்று அவர் செல்வாக்கை பயன்படுத்தி குறைவான விலைக்கு வாங்குவார்கள். சமையல் குழு, உணவு பரிமாறும் குழு, சுத்தபடுத்தும் குழு, போன்ற அனைத்தும் அவரே ஏற்பாடு செய்வார். அவர் எங்களுக்கு பக்கதுணையாக இருந்தமையால் பூச்சொரிதல் விழா  மிக, மிக சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

2016ம் ஆண்டு சத்திரத்தில் நடைபெறும் பூஜைக்கு வேண்டிய பூ, அம்மனுக்கு சாத்தவேண்டிய பெரிய மாலை திரு.சக்தி பன்னீர் அவர்கள் மேற்கொண்டு ரூ.6003/- நன்கொடையாக கொடுத்து அம்மன் அருளை பெற்றார். 2017ம் ஆண்டு மற்றும் 2018ம் ஆண்டு திரு.சக்தி பன்னீர் அவர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் முழுமையாக உதிரிபூ கைங்கரியம் செய்து சமயபுரத்தாள் அருளை பெற்றனர்.

திரு.N.C.சுப்ரமணியன் அய்யர் மற்றும் திருமதி.சரஸ்வதி சுப்ரமணியன் அவர்கள் 1996ஆம் ஆண்டு பொறுப்பேற்றிய முதல் சென்னையில் உதிரிபூக்கள் வாங்கும் பொறுப்பு திருமதி கமலாசெல்வம் அவர்களுடையது, அவருக்கு துணையாக அவர்களது கணவர் திரு செல்வம் அவர்களும் அதிகாலையில் பூக்கடைக்கு சென்று உதிரிபூக்களை பெற்று ஓர் இடத்தில சேமித்துவைக்கும் நேரத்தில் சென்னை பக்தர்களை அழைத்துச்செல்லும் ஊர்தி அங்குவந்து பூக்களை பெற்றுக்கொண்டு அண்ணா சாலை சிம்சன் வந்து பக்தர்களை ஏற்றி திருச்சி நோக்கி செல்லும். இவ்வாறு மிக்க அனுபவம் பெற்ற திருமதி கமலாசெல்வம் தலைமையில் 2019ம் ஆண்டு முதல் ஸ்ரீரங்கம் பூ விற்கும் வளாகத்தில் தரமான அன்று அதிகாலையில் பறித்த உதிரிப்பூக்களை பெற்றோம், 2018ம் ஆண்டு பெற்ற விலையில் சுமார் 60% விலைதான் ஆனது. உதிரிபூ 11/2 மடங்கு அதிகமானது சுமார் 300 மூங்கில் பூ கூடை நிறப்பும் அளவு. தொடர்ந்து ஸ்ரீரங்கம் வளாகத்தில் உதிரிபுஷ்பங்கள் பெறப்படுகின்றன.

2012 முதல் ஸ்ரீமாரியம்மன் ஆசியுடனும் ஆன்மீக மக்கள் ஒத்துழைப்புட்ன் வருடா வருடம் 5 முதல் 10 விழுக்காடு பக்தர்கள் உயர்த்து வருகிறது அவர்கள் மிக பக்தியுடனும், ஈடுபாட்டுடனும் பங்கேற்பினை சென்ற 12.03.2023, நடைபெற்ற 47ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவில் காண முடிந்தது.

பூச்சொரிதல் குழுவின் சமுதாய பொது நலன்

பூச்சொரிதல் விழாவிற்கு நாம் பெறும் நன்கொடையில், அம்மனுக்கு பூஜை, அலங்காரம்,  உதிரிப்பூக்கள், பாம்பன் ஸ்வாமி கோயில் பூஜை, அன்னதானம், சமயபுரம் அன்னதானம், சமயபுரத்தாள் அபிஷேகம் போன்ற செலவுகள் போக சமுதாய பொது நலன் கருதி கீழ்க்கண்ட நன்கொடைகள் கொடுத்துள்ளோம்.

Donation_details_word